மேலும்

ஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது சிறிலங்கா – ஆய்வு அமைப்பு

mangala-unhrcஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அளித்திருந்த வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட, வெரிட்டே என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் பொதுவாக மந்தநிலை காணப்படுகிறது.

30/1 தீர்மானத்தில், கொடுக்கப்பட்ட 36 வாக்குறுதிகளில், 4 வாக்குறுதிகள் மாத்திரம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், குறிப்பாக 22 வாக்குறுதிகள் விடயத்தில், மிகமோசமான நிலையே உள்ளது.

61.1 வீதமான விடயங்களில், முன்னேற்றங்கள் மிக மோசமாக உள்ளன. 25 வீதமான விடயங்களில், பகுதியளவான முன்னேற்றங்களே காணப்படுகின்றன. 2.8 வீதமான விடயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. 11.1 வீதமான விடயங்களில் மாத்திரம் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் 189 பரிந்துரைகளில், 20 வீதம் மாத்திரமே, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 57 வீதமான பரிந்துரைகள் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 22 வீதமான பரிந்துரைகள் விடயத்தில் மோசமான நிலை காணப்படுவதாகவும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *