மேலும்

Tag Archives: நடராஜா ரவிராஜ்

ரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு – தீர்ப்புக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அரசியலில் குதிக்கிறார் பிரவீனா ரவிராஜ்

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், கொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு – சட்ட மாஅதிபரும் மேல்முறையீடு செய்ய திட்டம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கேள்விக்குள்ளாக்கிய சிறிலங்கா நீதித்துறையின் நம்பகத்தன்மை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டமையானது சிறிலங்காவின் நீதிச்சேவை மீதான நம்பகத்தை மீண்டும்  சந்தேகத்திற்கு  உள்ளாக்கியுள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிங்கள ஜூரிகளால் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி  இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

கடற்படை புலனாய்வு முகாமிலேயே ரவிராஜ் கொலை திட்டமிடப்பட்டது – நீதிமன்றில் சாட்சியம்

கொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக ஆறு பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஆறு பேர் மீது சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.