மேலும்

Tag Archives: போர்க்குற்ற விசாரணை

போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம் – ஏஎவ்பி

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்- சிறிலங்கா இராணுவத் தளபதி

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்காது – என்கிறார் கோத்தா

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்காது என்றும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியேயே அதிகப்படுத்தும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விடாப்பிடி

சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை – சந்திரிகா

போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டியது எனது கடமை – சிறிலங்கா அதிபர்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது தனது பொறுப்பு மாத்திரமல்ல, கடமையும் கூட என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’  ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குத்துக்கரணம் அடித்தார் ரணில் – சனல் 4 செவ்வியை மறுக்கிறார்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சி செவ்வியில் தான் கூறவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணையே நடக்கும், அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அரசு

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இருக்காது என்றும், உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி நாளை கொழும்பு வருகிறார்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் செயல்முறைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானின் போர்க்குற்ற விசாரணை நீதிபதியான மோட்டூ நுகுசி சிறிலங்கா வரவுள்ளார்.