மேலும்

யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

ki.piஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியருமான- மறைந்த கி.பி. அரவிந்தன் ( பிரான்சிஸ், சுந்தர்) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த நினைவுப் பகிர்வு அமர்வில் பிரான்சிஸ் பற்றி (இளைஞர் பேரவைக் காலம்) அ.வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோர்  உரையாற்றவுள்ளனர்.

சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன்,  சுகு  சிறீதரன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

கி.பி.அரவிந்தன் படைப்புகள் பற்றி (அவருடைய கவிதைகள் உள்ளடங்கலாக) கவிஞர்  சோ.பத்மநாதன் உரையாற்றவுள்ளார்.

கி.பி.அரவிந்தனின் ஊடகப் பணிகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் பற்றி  ஜபாரும்,  புலம்பெயர் சூழலில் கி.பி அரவிந்தன் என்ற  தொனிப் பொருளில் அசுராவும் உரையாற்றவுள்ளனர்.

மேலும், கி.பி அரவிந்தன் என்ற ஆளுமை பற்றி அவரது நண்பர்களும் உரையாற்றவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு கருத்து “யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு”

  1. இர.இரா.தமிழ்க்கனல் says:

    காணொலி/ நிகழ்ப்பதிவு இணைப்பு தந்தால் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *