மேலும்

தேசியப்பட்டியலிலும் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள்

tna-leadersதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசியப் பட்டியல் மூலம் நிரப்பப்படும், 29 ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஐதேகவுக்கு 13 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 93 ஆசனங்களைப் பெற்றிருந்த ஐதேகவின் பலம், இதன் மூலம் 106 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட ரீதியாக 83 ஆசனங்களை வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் பலம் 95 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, மாவட்ட ரீதியில் 14 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் பலம் 16 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஜேவிபிக்கும் இரு தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜேவிபி உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் தவிர, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈபிடிபி தரப்பிலும் தலா ஒருவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *