மேலும்

புளொட் சார்பில் யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தன், மட்டக்களப்பில் அமலன் மாஸ்டர் போட்டி

siththarthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், புளொட் சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில், அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடவுள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த புளொட் அமைப்பின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில், புளொட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில், அமலன் மாஸ்டர் எனப்படும் சதாசிவம் வியாகுலேந்திரன் போட்டியிடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில், புளொட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலா ஒரு இடத்தில்,  பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்தும் அதிகாரத்தையும், கட்சியின் மத்திய குழு, புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கு வழங்கியுள்ளது.

இவர்கள், புளொட் சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும், ஐந்து வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *