மேலும்

Tag Archives: மரணதண்டனை

2015இற்குப் பின் அதிகாரிகள் 67 உள்ளிட்ட 637 சிறிலங்கா படையினரிடம் விசாரணை

2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 67 அதிகாரிகளும், 637 படையினரும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்குள் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் தூக்கு உறுதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

தூக்கிலிடுபவர்களை நியமிக்க நடவடிக்கை

சிறிலங்காவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கிலிடுபவர் (அலுகோசு) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்

சிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயக் குருக்களைக் கொன்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய், புலனாய்வாளர்கள் 3 பேருக்கு மரணதண்டனை

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,  அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி, நகைகள் மற்றும் உந்துருளியைக் கொள்ளையிட்ட சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு யாழ். மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

கொழும்பில் மூத்த ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்த 39 வயதுடைய குற்றவாளிக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

முன்னாள் போராளிக்கு மொனராகல மேல்நீதிமன்றம் மரணதண்டனை

தனமல்விலவில் மூன்று சிறிலங்கா காவல்துறையினரை சுட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு, மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.