மேலும்

9 புதிய தூதுவர்களை உறுதிப்படுத்தியது சிறிலங்கா – இருவர் படை அதிகாரிகள், ஒருவர் தமிழர்

sri-lanka-emblemசிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பேரின் விபரங்கள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது தூதுவர்களில்  இரண்டு ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்களும், ஒரு தமிழரும் அடங்கியுள்ளனர்.

இதன்படி,

  • தாய்லாந்துக்கான தூதுவராக சேனுகா செனிவிரத்ன
  • வியட்னாமுக்கான தூதுவராக, எச்.யு.திசநாயக்க
  • சுவீடனுக்கான தூதுவராக ஆர்.டி ராஜபக்ச
  • நெதர்லாந்துக்கான தூதுவராக ஏ.எச்.எம்.சாதிக்
  • இஸ்ரேலுக்கான தூதுவராக பி. செல்வராஜ்
  • பிரேசிலுக்கான தூதுவராக ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய
  • பாகிஸ்தானுக்கான தூதுவராக ஜெனரல் தயா ரத்நாயக்க
  • ஈரானுக்கான தூதுவராக வை.கே.ரோகணஜித்
  • கட்டாருக்கான தூதுவராக கலாநிதி டபிள்யூ.எம். கருணாதாச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய தூதுவர்களின் பெயர்களை இன்னமும் குறிப்பிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இராஜதந்திரிகள் அல்லாத- அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற சுமார் 29 நாடுகளுக்கான தூதுவர்களை திருப்பி அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *