மேலும்

சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்க்க தருணம் பார்த்துக் காத்திருக்கும் மகிந்த விசுவாசிகள்

modi-maithri-talks (3)இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இது தனது அயல்நாடுகள் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் இதற்கு மாறுபட்டதாகக் காணப்படுகிறது.  

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் கூட்டணி அரசாங்கம் ஏப்ரல் 29, 2015ல் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்ததன் மூலம், ஜனவரி 2015ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு ஆட்சிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

எனினும், சிறிலங்கா அரசாங்கமானது ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடாத்தப்படும் என அறிவித்த போதும் அதனை குறித்த காலப்பகுதிக்குள் மேற்கொள்ளத் தவறியுள்ளது.

அரசாங்கத்தின் பெரும்பாலான அதிகாரத்தையும் நிர்வாகத் தீர்மானத்தையும் பெருமளவில் எடுக்கக்கூடிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமே எதிர்காலத்தில் தெரிவுசெய்யப்படுவர்.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது பொதுத்தேர்தலை மேற்கொள்வதற்கான திகதியை அறிவிக்காது இழுத்தடிப்பதானது யார் வெற்றி பெறுவார்கள் என்கின்ற சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முரண்பாடான நிலையே பொதுத்தேர்தலுக்கான திகதிகளை அறிவிப்பதற்குத் தடையாக உள்ளது.

முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே அதிபர் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்த வேளையில், சிறிலங்காவின் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினராக மைத்திரிபால சிறிசேன விளங்கினார்.

இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சாராரால் அதிபர் வேட்பாளாராக நிறுத்துவதற்கான ஆதரவு வழங்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவால் தலைமை தாங்கப்படும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மைத்திரிபால சிறிசேன தேர்தலில் களமிறங்கியிருந்தார்.

சிறிலங்காவின் அரசியலில் ஒரு அதிரடித் திருப்புமுனையாக எதிர்க்கட்சி அரசாங்கத்திலும், அரசாங்கம் எதிர்க்கட்சியிலும் அங்கம் வகிக்கும் நிலை உருவாகியது.

அரசியல் நலன்கள் எனப் பார்க்கையில் இவ்வாறானதொரு கூட்டணியானது அசாத்தியமற்றதாகக் காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டமையே ஆகும்.

இந்தக் காரணியை அறிந்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அரசாங்கமானது 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றை அறிவித்தது. இதன்மூலம் நிறைவேற்று அதிகார முறைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கமானது தன்னை ஒரு பராமரிப்பு நிர்வாகியாக மாற்றிக் கொண்டதுடன், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பையும் மேற்கொண்டது.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் இவ்வாறானதொரு பொதுவான வேலைத்திட்டத்தை 2004ல் ஆரம்பித்திருந்தது. இதன்மூலம் இடதுசாரிக் கட்சிகளுடன் உறவை நெருக்கமாக்கிக் கொள்வதே இதன் நோக்காகும்.

இதன் மூலம் பாரதீய ஜனதாக் கட்சியை அரசாங்கத்திற்குள் நெருங்கவிடாது தடுப்பதே நோக்காகக் கொள்ளப்பட்டது.

சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது அரசியல்யாப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக வாக்குறுதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக நிறைவேற்று அதிபர் கொண்டுள்ள நிறைவேற்று அதிகார முறைமைகளை ஒழிப்பதுடன், அதிபரின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைப்பதெனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

தனிநபர்கள் நாட்டின் அதிபராக வருவதற்கான வாய்ப்புக்களை ஆராயக்கூடிய இரண்டு தவணைக்கால வரையறையும் உருவாக்கப்பட்டது. இத்துடன் காவற்துறை போன்றன சுயாதீனமாகச் செயற்படுவதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன.

சிறிலங்கா அதிபரின் அதிகாரத்தை பலப்படுத்துவதன் மூலம் ஆக்கபூர்வமான ஒரு பிரதமராகத் தெரிவு செய்ய முடியும். சிறிலங்காவின் நாடாளுமன்றில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சியானது தற்போதைய அரசாங்கத்தால் வைரயறுக்கப்பட்டதற்கு அமைவாக தனது வாக்குப்பலத்துடன் பிரதமராக முடியும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போன்றன பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதியை வரையறை செய்யாது தொடர்ந்தும் தமக்கு ஆகக்கூடிய நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காக  தமக்கிடையில் மோதிக் கொள்கின்றன.

மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் இவ்வாறான மாற்றங்களைச் செய்வதற்கு மேலதிக காரணங்களும் உண்டு. இது சிறிசேன அரசாங்கத்தால் மிகஆழமாக வெறுக்கப்படுகிறது.

கடந்த வாரம் ராஜபக்சவுக்கு விசுவாசமான  நான்கு  அமைச்சர்கள் சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து விலகினர். இவ்வாறான காரணிகள் சிறிசேனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் தாமதமாகும் போதிலும், தேர்தலானது நல்லாட்சிக்கு குந்தகம் விளைவித்துள்ளது.

சிறிசேன பதவிக்கு வந்த பின்னர், தென்னாசிய நாடான சிறிலங்காவில் சீனா தனது சொந்த நோக்குடன் துறைமுக நகர அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

சீனா தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் வர்த்தகத்தைத் துரிதப்படுத்துவதற்கான மூலோபாயத்தின் விளைவாக ‘ஒரு அணை ஒரு தடுப்பு’ என்கின்ற புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு முதற்கட்டமாக 1.5 பில்லியன் டொலர்களும், 1.3 பில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீடாகக் காணப்படுகிறது.

சிறிலங்காவில் முதலீடு செய்யப்பட்ட திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக சீனாவின் தனியார் துறையினர் கேள்வியெழுப்புகின்றனர்.

இதேபோன்று இந்தியாவும் சிறிலங்காவின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆனாலும் சிறிலங்காவானது தனது அரசியல் தலைநகரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

எனினும், தற்போதைய சூழலில், மூலோபாய ரீதியாக நோக்கில் இந்தியா தற்போது தனது பணியைத் தொடராது தொலைவில் நிற்பதாகவே உணரவேண்டும்.

பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான காலக்கெடுவை சிறிசேன அரசாங்கம் அறிவிக்கவில்லை. ஐ.தே.க நாட்டில் தேர்தல் இடம்பெறவேண்டிய கால அவகாசம் தொடர்பாகக் குறிப்பிடவில்லை.

ஆனால் இதனை சிறிலங்கா சுதந்திரக் கட்சி  தடுப்பதன் மூலம், இது ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான தருணத்தை மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிறிசேன அரசாங்கம் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறினாலும் கூட, 2015 செப்ரெம்பருக்கு முதல் தேர்தல் நடாத்துவதற்கான வாய்ப்புக் குறைவாகவே உள்ளது.

இடைக்கால ஆட்சியில் 20வது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியரசு அதிபர் தலைமையிலான பிரதமர் ஆட்சியை மேற்கொள்வதற்கான சட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.

அடிப்படை அரசியல் யாப்புவாதத்தின் மூலம் சிறிலங்காவானது தான் ஆட்சிக்கு வரும்போது எத்தகைய வாக்குறுதிகளை வழங்கியிருந்தது என்பதை மறந்து விட்டுத் தொடர்ந்தும் ஆட்சிப் பீடத்தில் இருக்கவேண்டும் எனக் கருதுகிறது.

ஆங்கிலத்தில் – Aditi Phadnis
வழிமூலம் – business-standard
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *