மேலும்

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை வழங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி

indo-pakசிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகாடமிக்கு இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு குதிரைகளை வழங்கியுள்ளன.

கடந்த வாரம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, எட்டுக் குதிரைகள் மற்றும் பாகிஸ்தானிய இராணுவத்தில் மேஜர் பதவியில் இருக்கும் கால்நடை மருத்துவர் உள்ளிட்ட 13 பேரை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், அது அவசரமாக இந்தியாவின் புனே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர், அந்த விமானம் கொழும்பில் இருந்து வந்த பொறியாளர்களால் திருத்தப்பட்ட நிலையில், கொழும்பு திரும்பியது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தியத்தலாவ பயிற்சி முகாமில் அந்தக் குதிரைகளை ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது பயணம் கடைசிநேரத்தில் கைவிடப்பட்டு விட்டது.

Indian-Horses (1)

Indian-Horses (2)

Indian-Horses (3)

அதேவேளை, பாகிஸ்தான் இராணுவம், குதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில், இந்திய இராணுவமும், நேற்று முன்தினம் ஆறு குதிரைகளை சிறிலங்கா இராணுவத்துக்கு அன்புளிப்புச் செய்துள்ளது.

இந்தக் குதிரைகளை நேற்றுமுன்தினம் தியத்தலாவ பயிற்சி முகாமில்  வைத்து இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஷ் கோபாலன், சிறிலங்கா இராணுவ பயிற்சி அகாடமி பணிப்பாளர் பிரிகேடியர் ராஜகுருவிடம் கையளித்துள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் குதிரைகளை முறைப்படி கையளிக்கும் நிகழ்வு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *