மேலும்

இந்தியா – சிறிலங்கா இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்துகிறது ஐ.நா

cruise-shipஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக, இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறு ஐ.நா முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இன்று கருத்து வெளியிட்டுள்ள அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் பிரதிநிதி, கோலம் அபாஸ்,

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மிள ஆரம்பிக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.

அது, நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்” என்ற தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவையை கூடிய விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

return-refugees (1)

return-refugees (2)

return-refugees (3)

return-refugees (4)

அதேவேளை, நேற்று திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்கள் ஊடாக அகதிகளுக்கான  ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன், 65 அகதிகள் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அகதிகளை மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வரவேற்று, அவர்களுக்கான உதவிகளை வழங்கினார்.

அதையடுத்து, அகதிகள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *