மேலும்

மைத்திரி, ரணில், சந்திரிகா இன்று யாழ். பயணம் – ஒரு தொகுதி காணிகளை ஒப்படைப்பராம்

Ranil-Maithri-Chandrikaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த சிறுபகுதி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் இவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கம் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குக் உள்ளடக்கப்பட்டுள்ள 1100 ஏக்கர் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

அதில், வளலாய் பகுதியில், மட்டும் விடுவிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி காணிகள் மட்டும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு, அதற்கான அனுமதிப்பத்திரங்களை சிறிலங்கா அதிபர் கையளிக்கவுள்ளார்.

அதேவேளை, இன்று சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வருவது குறித்து, தமக்கு எதுவும் தெரியாது என்றும், அதுபற்றித் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 1100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்ட போதும், வளலாய் பகுதியில் உள்ள காணிகள் மட்டும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்க மறுக்கப்பட்டது, அப்பகுதி மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், வலி. வடக்கின் ஏனைய பகுதி மக்களும், தாமும் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற சூழலிலேயே சிறிலங்கா அதிபர் , பிரதமர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வரவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *