மேலும்

போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவரையும் பாதுகாப்பேன் – மைத்திரி வாக்குறுதி

maithriதாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால், போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள அவரது தேர்தல் அறிக்கையில், “அனைத்துலக நீதிமன்றத்தை உருவாக்கும் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடவில்லை என்பதால், அதற்கு நாம் கட்டுப்பட வேண்டியதில்லை.

எனினும், உள்நாட்டில் சுதந்திரமான நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு பங்காற்றிய ஒவ்வொருவரையும், அனைத்துலக நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜபக்ச அரசாங்கம் சீனாவுக்கு நெருக்கமான கொள்கையை கடைப்பிடிப்பதால், இந்தியாவின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டுள்ளது.

அதிபர் தேர்லில் வெற்றி பெற்றால், சமநிலையான வெளிவிவகாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படும்.

அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறிலங்கா திடீரென தனித்து விடப்பட்டுள்ளது.

ஆசியாவின் பிரதான நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், மற்றும் ஜப்பானுடன் சமமான உறவுநிலை பேணப்படும்.

ஜனநாயக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள கொழும்பு மறுப்புத் தெரிவித்ததால், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு நடத்தப்படும்.

ஏற்றுமதி மற்றும் மேலதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியம்”  கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *