மேலும்

நீதியான தேர்தல் நடத்தக் கோரி சிறிலங்கா தேர்தல் செயலகம் முன் போராட்டம்

elections_secretariatதேர்தல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிறிலங்கா தேர்தல்கள் செயலகத்தின் முன்பாக இன்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு போராட்டத்தில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தலை நியாயமாகவும் நீதியாகவும் நடப்பதை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

தேர்தல் செயல்முறைகளில் ஒவ்வொருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

protest

எந்தவொரு தீவிரவாத அல்லது துணை ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்களோ அழுத்தங்களோ இல்லாமல், அமைதியான சூழ்லில் சிறிலங்காவில் நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், சிறிலங்கா அதிபருக்கு ஆதுரவான சுவரொட்டிகளை ஒட்ட சிறிலங்கா  இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதாகவும், அரசாங்க வளங்கள் பயனபடுத்தப்படுவதாகவும், சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *