மேலும்

Tag Archives: தேர்தல்

நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி

மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து  தாம் 10 மில்லியன் ரூபாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர.

அதிபர் தேர்தலில் கோத்தாவை நிறுத்த ராஜபக்ச குடும்பம் முடிவு?

சிறிலங்கா அரசியலில் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு்ப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு

புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில்,  25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளை தடுக்க வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் மைத்திரி – பீரிஸ் குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது கூட்டமைப்பு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வவுனியாவில் வெளியிடப்பட்டது.

பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் தேர்தல் பிற்போடப்படும் – ஆணைக்குழு எச்சரிக்கை

எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார்.

அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடத் தடை

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது, உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தேர்தல் முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.