மேலும்

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பிரித்தானியா ஆதரவு – இரகசிய ஆய்வையடுத்து முடிவு

uk-flagசிறிலங்காவில் ஆட்சிமாற்ற ஏற்படுவதற்கு பிரித்தானியாவின் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொன்சர்வேட்டிவ் கட்சியின் மூன்று பிரதிநிதிகள் அண்மையில் சிறிலங்கா வந்து, எதிரணியின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, அவர்கள், அதிபர் தேர்தலில் அவருக்குப் பின்புலத்தில் இருந்து ஆதரிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

சிறிலங்கா வந்த கொன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதிகள், ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐதேக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜெயசூரிய, ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுக்களின் போது, அண்மையில் சிறிலங்காவில் பிரித்தானிய அரசாங்கத்தினால் ஒரு இரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவின் படி, சிறிலங்காவில் நல்லாட்சிக்கான மாற்றம் ஒன்று நிகழ்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் அரசியல் ரீதியாக ஆதவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வந்த கொன்சர்வேட்டிவ் கட்சி பிரதிநிதிகள், தமது பயணம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை அளிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *