மேலும்

மகிந்தவைப் பாதுகாக்கும் மைத்திரி – கருத்துக்கூற மறுக்கிறது கூட்டமைப்பு

Suresh-Premachandranஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, இது பொதுவேட்பாளர் கூறிய கருத்து என்றும், அதுபற்றி தமிழ்த் தேசியக் சொல்வதற்கு ஒன்றுமில்லை என பதிலளித்துள்ளார்.

“ஐ.நா விசாரணை பற்றிய விவகாரங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தினால், கையாளப்பட்டு வருகிறது.

வரும் மார்ச் மாதம், இதுபற்றிய அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

மைத்திரிபால சிறிசேன தான் விரும்பிய எதையும் கூற முடியும்.

ஆனால், இந்த விவகாரத்தில் நாம் ஆழமாகச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிபர் தேர்தல் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவையே கூட்டமைப்பு எடுக்கும்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் வரையில் நாங்கள் காத்திருக்கிறோம்.

அதற்குப் பிறகு வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து எமது முடிவை எடுப்போம்.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வல்லமைபெற்ற அரசியல் சக்தியாக இருக்கிறது என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் வடக்கு கிழக்கில் நடந்த எல்லா தேர்தல்களிலும் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *