இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து பேச்சு
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சு நடத்தியுள்ளன.
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சு நடத்தியுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான, பயணிகள் கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையம் ,காங்கேசன்துறை துறைமுகம் போன்ற வடக்கின் முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்பை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
காங்கேசன்துறை, கீரிமலையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.