மேலும்

செழுமைமிக்க நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு பின்னடைவு

Legatum-Prosperity-Indexஉலகளவில் செழுமைமிக்க நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. Legatum Institute என்ற அமைப்பினால், ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், Legatum Prosperity Index 2014 வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 142 நாடுகளின் பொருளாதாரநிலை மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு, உலகளவில் செழுமைமிக்க நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டு 62வது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டில், 58வது இடத்திலும், 2013ம் ஆண்டில், 60 வது இடத்திலும், சிறிலங்கா இடம்பிடித்திருந்தது.

இந்தப் பட்டியலில், முதல் பத்து இடங்களை, சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து, டென்மார்க், கனடா, சுவீடன், அவுஸ்ரேலியா, பின்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

கடைசி பத்து இடங்களை, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், கொங்கோ, புரூண்டி, யேமென், ஆப்கானிஸ்தான், டோகோ, ஹெய்டி, சியராலியோன், கினியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

அதேவேளை, இந்தியா 107 இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *