மேலும்

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை – எரிக் சொல்ஹெய்ம் வரவேற்பு

erik-solheimஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார்.

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதாகவும், இது ஐ.நா மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் நேற்று முன்தினம் டுவிட்டர் பதிவு ஒன்றில் எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து, டுவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவரின் கருத்து மிகவும் சரியானது என்று வரவேற்றுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவுக்குச் சாட்சியம் அளிப்பதற்கான வெற்றுப் படிவங்களுடன், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்தே, அமெரிக்கத் தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *