மேலும்

நிலச்சரிவில் அநாதரவான சிறுவர்களை வட மாகாணசபையிடம் ஒப்படைக்க சிறிலங்கா மறுப்பு

mahinda-amaraweeraமலையகத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

நிலச்சரிவினால், பெற்றோரை இழந்த 75 சிறுவர்களையும், பொறுப்பேற்று அவர்களுக்கான கல்வி வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வடக்கு மாகாணசபை தயாராக இருப்பதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர,

அரசியல் இலாபம் கருதியே மீரியபெத்தவில் அநாதரவான சிறுவர்களைப் பொறுப்பேற்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

முன்னர், 75 சிறுவர்கள் பெற்றோர் இருவரையும் இழந்து விட்டதாக ஆரம்ப அறிக்கைகள் கூறின.

ஆனால், மூன்று சிறுவர்கள் மாத்திரமே தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர். நான்கு சிறுவர்கள் மட்டும், பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர்.

அநாதரவான சிறுவர்களையும், பாதிக்கப்பட்ட சிறுவர்களையும், பராமரிக்கும் ஆற்றல் அரசாங்கத்துக்கு உள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிடும் உரிமை, முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரனுக்கு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நன்றாகவே கவனிக்கப்படும் நிலையில், அவர்களின் நலன் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவை வடக்கு மாகாணசபைக்கு இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எடுத்த முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் வரவேற்கிறது.

ஆனால், அவர்களைப் பராமரிப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *