மேலும்

Archives

யாழ். மாணவர்கள் கொலை – ஐந்து சிறிலங்கா காவல்துறையினருக்கும் விளக்கமறியல்

கொக்குவில் – குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா கடற்படைகள் கடல் எல்லையில் சந்திப்பு

இந்திய – சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான 27 ஆவது அனைத்துலக கடல் எல்லைச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 சிறிலங்கா காவல்துறையினர் கைது

கொக்குவில்- குளப்பிட்டிச் சந்தியில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமானதாக தெரியவந்துள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சம்பந்தனைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நிமால் நினைவு நாளில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்கா மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொன்லன்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.

கோல் ஊன்றிப் பாய்தலில் யாழ். மாணவன் புதிய சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.

சிறிலங்காவுக்கு 2623 கோடி ரூபா இராணுவ உதவி, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் – சீனா இணக்கம்

சிறிலங்காவுக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.