மேலும்

Archives

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சிறிலங்காவின் அடுத்த மனித உரிமைகள் சவால்

சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பாரியளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்பதால் இதனைத் தடுப்பதற்கு சிறிலங்காவைச் சேர்ந்த செயற்பாட்டார்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

சீன- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த இருநாடுகளின் தலைவர்களும் உறுதி

அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை  மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, சிறிலங்கா தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிரிக்ஸ், பிம்ஸ்ரெக் மாநாடுகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

சிறிலங்காவிடம் அவசர உதவி கோரிய அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து, சிறிலங்கா கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் – மங்களவைச் சந்தித்தார்

பத்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்களை அம்பலப்படுத்தும் முன்னாள் கடற்படை அதிகாரி

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர்.

வடக்கின் வீதி வலையமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா உதவி

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார்.