மேலும்

Archives

‘நிமலராஜனைக் காப்பாற்றத் தவறிவிட்டேன்’ – பிரியத் லியனகே

மயில்வாகனம் நிமலராஜன் என்ற பெயரானது மத்திய லண்டனில் உள்ள பி.பி.சி தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெவ்வேறு நிலையிலுள்ள பணியாளர்களால் ஒவ்வொரு நாளும் பேசப்படும் ஒரு பெயராக மாறியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜன் அர்ப்பணிப்பு நிறைந்த தொழில் நேர்த்தியைக் கொண்ட ஒரு துணிச்சல் மிக்கவராவார்.

கிளிநொச்சியில் நேற்றிரவு பதற்றம் – வீதியில் ரயர்கள் எரிப்பு

கிளிநொச்சியில் நேற்றிரவு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தினால், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், பதற்றமான நிலை காணப்பட்டது.

போத்தலால் குத்தப்பட்டு சிறிலங்கா காவல்துறை அதிகாரி காயம் – கிளிநொச்சியில் பதற்றம்

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் அதிகாரி ஒருவர் முகத்தில் போத்தலால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடமாகாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்துக்கு நீதிகோரியும் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயலிழந்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தொடங்கியது இந்திய- சிறிலங்கா இராணுவ கூட்டுப் பயிற்சி

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப்படைப்பிரிவுத் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமானது.

பல்கலைக்கழக மாணவர்களின் முற்றுகையில் சிக்கிய யாழ். மாவட்டச் செயலகம், ஆளுனர் செயலகம்

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்

சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கஜனின் உடல் கிளிநொச்சியில் அடக்கம்

கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இளம் ஊடகவியலாளர் அஸ்வினின் உடல் மாதகலில் நல்லடக்கம்

உக்ரேனில் காலமான இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர வரைஞருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிநிகழ்வு நேற்று மாதகலில் இடம்பெற்றது.