பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் உக்ரேன் காட்டுப் பகுதியில் காலமானார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தின் இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் உக்ரேன் காட்டுப் பகுதியில் காலமானார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்ரகனுக்குச் சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அமெரிக்க படைத் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தராமனின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவை வற்புறுத்தவில்லை என்றும், எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு காலவரம்பு எதையும் விதிக்கவில்லை என்றும் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய-சிறிலங்கா அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.