மேலும்

நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு

vice-admiral-ravindra-wijegunaratne-usa-1அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இருதரப்புக்கும் நன்மை தரக்கூடிய விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்க கடலோரக் காவல்படையின் அதிகாரி றியர் அட்மிரல் ஜோசப் வொஜ்வோடிச்சையும் சிறிலங்கா கடற்படைத் தளபதி தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

vice-admiral-ravindra-wijegunaratne-usa-1vice-admiral-ravindra-wijegunaratne-usa-2

இந்தச் சந்திப்புகளில் சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் றியர் அட்மிரல் தர்மேந்திர வெட்டேவ, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரக இராணுவ ஆலோசகர் பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்க,கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட செயலர் கப்டன் புத்திக லியனகமகே, சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி இராணுவ ஆலோசகர் லெப்.கேணல் ஜேக்கப் இங்லிஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *