மேலும்

Archives

மத்தல விமான நிலையத்தில் விமானக்கடத்தல் முறியடிப்பு, பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை

நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்கள், மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

ஒபாமாவின் விருந்துபசாரத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.

திருகோணமலையில் புதிய இராணுவ அருங்காட்சியகம் – புலிகளின் ஆயுதங்களும் காட்சிக்கு

திருகோணமலை, உவர்மலையில் உள்ள 22 ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறிலங்கா இராணுவம் புதிய இராணுவ அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளது. புதிய இராணுவ அருங்காட்சியகத்தை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடந்த 19ஆம் நாள் திறந்து வைத்தார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க தளபதிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, அமெரிக்க கடற்படைத் தளபதிகளுக்கும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப மறுக்கின்றனராம் – ஜோன் கெரியிடம் மைத்திரி

பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தை தொடர்வதற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதி அளித்துள்ளார்.

புதிய கட்சியைப் பதிவு செய்ய மகிந்த அணியினர் எடுத்த முயற்சி தோல்வி

மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியல் கட்சியை இப்போது பதிவு செய்ய முடியாது என்று, கூட்டு எதிரணியினருக்கு சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

பூகோள விவகாரங்களில்  வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து  மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல் சிறிலங்கா அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.

முடிவுக்கு வந்தது சிறிலங்கா படைகளின் ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிறிலங்கா குறித்தும் ஐ.நா பொதுச்சபையில் பான் கீ மூன் உரை

நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.