மேலும்

Archives

இந்தியாவின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்த சிவ்சங்கர் மேனனின் நூல்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள்  சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது – டிசெம்பர் 2 வரை விளக்கமறியல்

நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கட்சியின் தலைமையை மகிந்த ஏற்றுக்கொள்ளுவார் – பசில் அறிவிப்பு

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலியாவில் தேசியமட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஈழத்தமிழர் அணி கோப்பையை வென்றது

அவுஸ்ரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், சிறிலங்காவில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

வட,கிழக்கின் முன்னாள் இராணுவ ஆளுனர்கள் எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டு வைத்தார்.

இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை

புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது குறித்து சிந்திக்க வேண்டாம்என்று கூறுவது போல் கொலை நடந்துள்ளது. – லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி 

போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறிலங்கா இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறதா சீனா?

சீனத் தூதுவர் வழமைக்கு மாறாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மற்றும் சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தமையானது கொழும்பில் ஆட்சி மாற்றம் ஒன்றை சீனா எதிர்பார்ப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பலரும் உற்றுநோக்குகின்றனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.  கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

தேசிய துக்கநாளில் மதுபான விருந்துடன் இந்தியத் தூதுவரின் பிரியாவிடை – மைத்திரியும் பங்கேற்பு

சிங்கள இசையுலக மேதையான பண்டித அமரதேவாவின் மறைவுக்கு ஏழு நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவின் பிரியாவிடை நிகழ்வில் மதுபான விருந்து அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.