மேலும்

Tag Archives: வெசாக்

சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி

சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.

மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

24 மணிநேரம் வரையே சிறிலங்காவில் தங்கியிருப்பார் இந்தியப் பிரதமர்

எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கு 6000 காவல்துறையினர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான சிறப்பு பாதுகாப்பில், 6000 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கொழும்பில் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி

சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைப்பார் என்று சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மே மாதம் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு சிறிலங்கா அழைப்பு

அடுத்த ஆண்டு ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்புகளை விடுத்துள்ளது.

வரும் மே 12இல் சிறிலங்காவில் ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு – மோடியும் பங்கேற்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று,  சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்கா வருகிறார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வெசாக் கொண்டாட்டங்களில் நிஷா பிஸ்வால் – இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.