சிறிலங்கா வராமல் திரும்பும் சீன ஆய்வுக்கப்பல்
இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின் டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர் நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின் டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர் நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காள விரிகுடா முனைப்பு திட்டத்தின் கீழ் கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மற்றும் கடல்சார் விழிப்புணர்வுக்கான ஆதரவாக, சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் நிதியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் டி வஜ்டா,தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் சிறிலங்காவும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வடகீழ் பருவக் காலத்தின் இரண்டாவது கட்ட மழை வீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாரிய உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல் உள்ளிட்ட ஜப்பானிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
மலபார் பயிற்சி எனப்படும், இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகளின் பாரிய கூட்டுப் போர் ஒத்திகை, வங்காள விரிகுடாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.