மேலும்

Tag Archives: மாவீரர்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு எழுச்சியுடன் அஞ்சலி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

மாவீரர்களை நினைவுகூர சிறிலங்கா அனுமதிக்க வேண்டும்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

வடக்கு, கிழக்கில் போரில் இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனகபுரம் துயிலுமில்ல புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை மீளமைப்பதற்கான பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச்  செயலகத்துக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை தடைகளை மீறி தீபம் ஏற்ற தயாராகிறது கூட்டமைப்பு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா காவல்துறை உத்தரவுகளை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழீழ தாயக விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கில் மாவீரர் நாளை சிறிலங்கா காவல்துறை தடுக்க வேண்டும் – என்கிறார் மகிந்த

இந்த வாரம் மாவீரர் நாளை ஒட்டி, வடக்கில் விடுதலைப் புலிகளின் கொடி ஏற்றப்படுவதற்கு சிறிலங்கா காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

உறவினர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் புலிகளுக்கு உயிரூட்ட அனுமதியோம் – வாசுதேவ

போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருகின்ற போர்வையில் மீண்டும் புலிகளுக்கு உயிரூட்டுவதை அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

தமிழ்மக்களின் உளவியலைப் பாதித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பு

தமது நேசத்திற்குரியவர்கள் உயிர்நீத்த பின்னர் அவர்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருவதற்கான ஒரேயொரு இடமாகக் காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உளவியலை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இராணுவத்தால் இவை நிர்மூலமாக்கப்பட்டமையால் தமிழ் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

இன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் நெஞ்சில் ஏந்துவோம்

கனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை? முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.