மேலும்

Tag Archives: நீதிபதி

வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே விசாரணை – மூன்று நீதிபதிகளும் நியமனம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு – கூட்டமைப்பு அதிர்ச்சி

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

பொறுப்புக்கூறலை விட எதிர்காலத்தின் மீதே தமிழ் மக்களுக்கு அதிக கரிசனை – என்கிறார் சந்திரிகா

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை – என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

உள்நாட்டு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்தக் காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காரணம் கொண்டும் வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளை கொண்டு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்பு செயலணி

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.