மேலும்

Tag Archives: நடராஜா ரவிராஜ்

ரவிராஜ் படுகொலை சூத்திரதாரியை கைது செய்ய சுவிசின் உதவியை நாடுகிறது சிறிலங்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்து விசாரித்து வரும் சிறிலங்கா காவல்துறை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக கருணாவிடம் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க, நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரவிராஜ், எக்னெலிகொட படுகொலைகளை மேற்கொண்டது சிறிலங்கா புலனாய்வு பிரிவே- விசாரணையில் உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலைகள், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் படுகொலை பிரதான சந்தேகநபர் சுவிசில் – சிறிலங்காவுக்கு கொண்டு வர நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய, முக்கிய சந்தேகநபரை சுவிற்சர்லாந்தில் இருந்து விசாரணைக்காக சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ரவிராஜைக் கொல்ல கொலையாளிகளுக்கு துப்பாக்கியைக் கொடுத்த மூத்த இராணுவ அதிகாரி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி-56 துப்பாக்கியை, கொலையாளிகளுக்கு சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி வழங்கியது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கில் நேவி சமந்தவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கா கடற்படை கப்டன் சமந்த முனசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

ரவிராஜ் கொலையாளிகளான சிறிலங்கா கடற்படையினர் மூவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட, சிறிலங்கா கடற்படையினர் மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.