மேலும்

Tag Archives: தேர்தல் ஆணையாளர்

335 உள்ளூராட்சி சபைகளுக்கு ஜனவரி 20இல் தேர்தல் நடப்பது உறுதி – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் 2018 ஜனவரி 20ஆம் நாள், 333 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதி என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தலைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது கொமன்வெல்த்

சிறிலங்காவின் தேர்தலைக் கண்காணிக்க, மோல்டா நாட்டின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜோர்ஜ் அபேலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவை அனுப்பி வைப்பதாக, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டது உண்மையே – தேர்தல் ஆணையாளர்

கொழும்பில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு முடிவுக்கு வந்தது

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு சற்று முன்னர் முடிவடைந்துள்ளதாக, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

மறுவாக்குப்பதிவு நடத்த தயங்கமாட்டேன் – மைத்திரிக்கு தேர்தல் ஆணையாளர் வாக்குறுதி

 நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எவரேனும் தேர்தல் சட்டங்களை  மீறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அல்லது, வன்முறைகள் தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவை நடத்தவோ தயங்கமாட்டேன் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.

இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் பிற்போடப்படாது – தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையால், வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைப் பிற்போடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பாதுகாப்புக்கு 45 அதிரடிப்படையினர் – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், அவருக்கு 45 சிறப்பு அதிரடிப்படையினரைப் பாதுகாப்புக்கு நியமிக்குமாறும், சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

எதிரணியின் பரப்புரையை முடக்கும் சிறிலங்கா அரசின் புதிய தந்திரோபாயம்

கொழும்பிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், எதிரணியினால் பெரியளவிலான பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாத வகையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.