மேலும்

Tag Archives: தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பில் இன்று எழுக தமிழ் நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புலிகள் மீதுள்ள சிங்கள மக்களின் வைராக்கியமே வடக்கு மக்கள் மீது குறை கூறுவதற்குக் காரணம்

விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம் என்று  வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அதிகாரப் பகிர்வுக்கான திட்ட வரைவு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில், அதிகாரப் பகிர்வு யோசனை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வெளியிட்டார்.

பேரவை விவகாரத்தில் விக்னேஸ்வரனுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழுத்தம்

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள போதிலும், இந்தப் பேரவையில் இணைந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே கடமையாற்றும் என வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுடன் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் மூலம், இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.