துறவறம் பூணுகிறார் கோட்டா?
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச துறவறம் பூண வாய்ப்புள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களின் எழுச்சியால் பதவியிழந்த கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்து, 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அண்மைக்காலமாக அவர் பௌத்த தத்துவத்தின் பக்கம் ஆழமாகத் திரும்பியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நாளின் பெரும்பகுதியை தியானத்தில் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
அவர் வெளியாட்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருவதுடன், பௌத்த நூல்கள் மற்றும் தியானம் பற்றிய புத்தகங்களை ஆழமாகப் படிப்பதில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், அவர் வாழ்க்கையின் இறுதிப்பகுதியில், முறையாக துறவறத்திற்குள் நுழைவதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதாகத் கூறப்படுகிறது.
அவ்வாறாயின், உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தைத் தழுவிய முதல் சிறிலங்கா அதிபராகவும் அவர் இருப்பார்.
