சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் – சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தில் சேர்ந்து கொள்வதில் தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தில் சேர்ந்து கொள்வதில் தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருமே, எந்தவொரு போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை என்று, போர்க்குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் நாள் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
போர்ப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.
சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் நகரில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது மாடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ரோக்கியோவில் சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் ஜப்பானிய காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.