மேலும்

Tag Archives: காவல்துறை

கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி

கறுப்பாடுகள் எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள ஞானசார தேரரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை

இனவெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டி வந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்

பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை

சிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

நீல நிறத்துக்கு மாறுகிறது சிறிலங்கா காவல்துறை சீருடை

சிறிலங்கா காவல்துறை சீருடையை நீல நிறத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளில் இருந்து இராணுவத்துக்கு விலக்கு அளிக்க முடியாது – சிறிலங்கா காவல்துறை

சர்ச்சைக்குரிய விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பணியகத்துக்கு சிறிலங்காவில் இடமில்லை – அனைத்துலக சமூகம் தமது பக்கம் நிற்கிறதாம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ செயற்பாடுகளுக்கு தடை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்பாடு, துறைமுகத்தை இராணுவ நோக்கில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.