மேலும்

Tag Archives: காவல்துறை

மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

காவல்துறை, ஊடகத்துறையை வசப்படுத்த மைத்திரி முயற்சி – ஐதேக கடும் எதிர்ப்பு

சட்டம் ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால், புதிய அமைச்சரவை நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை – மட்டக்களப்பு விரைகிறார் பூஜித ஜெயசுந்தர

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு விரைந்துள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலை – மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவினரை, விடுவிப்பது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

படுகொலைச் சதித் திட்டம் – விசாரணை வளையத்தில் உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகள்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின். கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை, கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,  தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் வீழ்ச்சி – ரணில்

சிறிலங்காவில் குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை

அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்த சிங்கள நாளிதழ்களின் செய்தி – சிறிலங்கா அதிபர் விசாரணைக்கு உத்தரவு

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக, இரண்டு சிங்கள நாளிதழ்களில் நேற்று வெளியாகிய செய்தி தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.