கொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்?
கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கனடாவில் இருந்து சிறிலங்காவுக்கு சென்ற போது, கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தமிழருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ள ‘நவீன பாசிசவாதிகள்’ தான் இந்தியாவுடனான நெருக்கமான உறவை எதிர்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம் அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.