சிறிலங்கா கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாகப் பதவி உயர்வு
சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக, றியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு, ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில் இவர் ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட சயுரால போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக இயக்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கொழும்பு வந்திருந்தனர்.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி நேற்று பருத்தித்துறை- வல்லிபுரக்கோவில் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா, சிறிலங்கா அதிபர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொகமட் சகாவுல்லா சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமான நிலையத்தில் வரவேற்றார்.
எழிமலவில் உள்ள இந்தியக் கடற்படை அகடமியில் 338 கடற்படையினர் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.