மேலும்

கொழும்புக்கு வந்துள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்

Indian_Defence-kapilaஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட சயுரால போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக இயக்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கொழும்பு வந்திருந்தனர்.

இந்திய பாதுகாப்பு அமைச்சின், பாதுகாப்பு தயாரிப்பு பிரிவுக்கான செயலர் அசோக் குமார் குப்தா, கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின்  தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான, றியர் அட்மிரல் சேகர் மிட்டல், ஆகியோரும் இந்தியக் கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி  வைஸ் அட்மிரல் ஏ.ஆர்.கார்வே  ஆகியோர் இதற்காக கொழும்பு வந்திருந்தனர்.

இவர்கள் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Indian_Defence-kapila

அதேவேளை, இந்திய பாதுகாப்பு செயலர் (பாதுகாப்பு உற்பத்திகள்) அசோக் குமார் குப்தாவும், கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான, றியர் அட்மிரல் சேகர் மிட்டல் ஆகியோர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

Vice Admiral AR Karve -ravi

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் ஏ.ஆர்.கார்வே நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இந்திய கடற்படைத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *