மேலும்

Tag Archives: உலங்குவானூர்தி

சீனாவின் உலங்குவானூர்தி, கப்பல் தயாரிப்பு முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டையில் ஆய்வு

சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்று அம்பாந்தோட்டையில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது.

மூகாம்பிகை அம்மனை வழிபட நாளை உடுப்பி செல்கிறார் ரணில் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நாளை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையிடம் வரும் 22ஆம் நாள் கையளிக்கப்படுகிறது பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வரும் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரெஞ்சுப் போர்க்கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள பிரெஞ்சுப் போர்க்கப்பல்களை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று பார்வையிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள்

பிரெஞ்சு கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியை சேவையில் இருந்து நீக்குகிறது சிறிலங்கா விமானப்படை

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது பலத்த சேதமடைந்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி சேவையில் இருந்து முற்றாக நீக்கப்படும் என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

உலங்குவானூர்திகளுக்கான உதிரிப்பாகங்களை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா

சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளுக்குத் தேவையான அவசர உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை விநியோகித்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் போர்க்கப்பலில் உதவிப் பொருட்களுடன், மீட்புக் குழுக்களும் கொழும்பு வருகை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வீட்டின் மீது விழுந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை எம்.ஐ -17 உலங்குவானூர்தி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் எம்,ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

தடையை மீறி தலதா மாளிகைக்கு மேலாக பறந்ததா மோடியின் உலங்குவானூர்தி?

கண்டியில் தலதா மாளிகைக்கு மேலாக- விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.