அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் திலக் மாரப்பன சந்திப்பு
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, அவுஸ்ரேலியா, அனைத்துலக காவல்துறை புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர்.
சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் அடிப்படையற்றவை என்று நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்த வழங்குகள் தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் சிறிலங்காவில் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் அகிம்சா விக்ரமதுங்கவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள- மிகப்பெரிய போர்க்கப்பல், அடுத்த மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.