வரிகள் குறித்து அமெரிக்காவுடன் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வரிகள் தொடர்பாக இன்னமும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வரிகள் தொடர்பாக இன்னமும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிலங்கா விமானப்பரடை உலங்குவானூர்தியை பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
எண்ணெய் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறதா என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அடுத்தவாரம் மற்றொரு சுற்றுப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் ஜமிசன் கிரீருக்கும் (Jamieson Greer) இடையில் மெய்நிகர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்காக, அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து சிறிலங்கா பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு உடன்பாடுகளை மீறுவதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
வரிகளைக் குறைப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்க குழு வரும் 18ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.