அமெரிக்கா, ஜப்பானுக்குச் செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்ரெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.
அத்துடன், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரெஸையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயணத்தை முடித்த பின்னர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், செப்ரெம்பர் 26 ஆம் திகதி சிறிலங்கா அதிபர், ஜப்பானுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜப்பானில், 27 ஆம் திகதி சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, மூத்த ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடவுள்ளார்.