மேலும்

Tag Archives: ராஜித சேனாரத்ன

அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்?

முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மகிந்தவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எதையும், சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என்று அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் தேசப்பற்று மிக் விசாரணையில் அம்பலமாகும் – ராஜித சேனாரத்ன

சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக். கொள்வனவு பற்றிய விசாரணைகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எத்தகையவர் என்பதை அம்பலப்படுத்தும் என்று சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரவணைப்பிலேயே இருந்தது என்று,  சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம்; காலை வாரி விட்டார் – பொது பலசேனா

கடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இராணுவப் புரட்சி – எச்சரித்தார் தினேஸ், நிராகரித்தார் ராஜித

சிறிலங்காவில் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்கா வருகிறார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

உள்ளக விசாரணையே நடக்கும், அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அரசு

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இருக்காது என்றும், உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன.

ஈராக்கிலுள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடும் யோசனை- அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்

ஈராக்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடுவதற்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினால், சிறிலங்கா அமைச்சரவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.