மேலும்

Tag Archives: ராஜித சேனாரத்ன

யோசித ராஜபக்ச விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

தெல்லிப்பழைப் பகுதியில்,  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சவையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஒரு அங்குல காணி கூட சீனாவுக்கு உரிமையாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசு திட்டவட்டம்

சீனாவுக்கு ஒரு அங்குல காணியேனும் உரிமையாக வழங்கப்படாது என்றும், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகா வெளியிட்ட படங்கள் – அதிர்ச்சியில் விஜேதாச ராஜபக்ச

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும், ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.

பல்கலைக்கழக, உயர்வகுப்பு மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை

பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவன் கார்ட் நிறுவனம் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைப்பு – சிறிலங்கா அதிபர் உத்தரவு

அவன் கார்ட் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்பாடுகளை ரத்துச் செய்து, குறித்த நிறுவனம் முன்னெடுத்து வந்த அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துலகத்தை வெற்றி கொண்டு விட்டோம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாகவே இராஜதந்திரங்களை வகுக்கின்றன, இந்தியப் பெருங்கடல் விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வராது என்று சிறிலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தரைவழிப் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் – சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆலோசனை

தமிழ்நாட்டையும், இலங்கைத் தீவையும்  தரைவழி பாலம் மற்றும் கடலடிச் சுரங்கம் மூலம் இணைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆராயவுள்ளது.

போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை ஏற்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.