மேலும்

Tag Archives: ரஷ்யா

158.5 மில்லியன் டொலருக்கு ரஷ்ய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

ரஷ்யாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது.

நீர்க்காகம் போர்ப் பயிற்சி தொடங்கியது – 69 வெளிநாட்டு படையினரும் பங்கேற்பு

சிறிலங்கா இராணுவம் நடத்தும் ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’  மின்னேரியாவில் உள்ள காலாட்படைப் பயிற்சி மையத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஷ்யாவில் நடக்கும் ‘இராணுவம்-2017’ என்ற அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சி, அனைத்துலக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

நத்தைவேகத்தில் சிறிலங்காவுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பியது ரஷ்யா

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 32 தொன் உதவிப் பொருட்களை விமானம் மூலம் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக, ரஷ்யாவின் சிவில் பாதுகாப்பு, அவசர மற்றும் அனர்த்த உதவி அமைச்சின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ரஷ்யாவின் ஜிபாட் 3.9 போர்க்கப்பல்கள் – இறுதிக்கட்டத்தில் பேச்சுக்கள்

சிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 (Gepard 3.9) ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலங்கு வானூர்தி பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்க ரஷ்யா திட்டம்

சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் ரஷ்யத் தயாரிப்பு உலங்கு வானூர்திகளின், பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கான யோசனையை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – நாளை மறுநாள் புடினுடன் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய அதிபரின் அழைப்பின் பேரில், நாளை ரஷ்யா செல்லும் சிறிலங்கா அதிபர், வரும் மார்ச் 24ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார்.

ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு

ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணமாக வருகை தரும்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.