மேலும்

Tag Archives: பாதுகாப்பு

சீன – அமெரிக்க – இந்திய உறவுகளின் பண்புகள் – ‘தாராள சனநாயக அரசியல் சமுத்திரத்தில் நீந்தக் கற்றல்’

எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படைக்கு உரிமை உள்ளதாம்

இந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – என்கிறார் கோத்தா

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு

பிரித்தானியாவின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ரோயல் கல்லூரியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்

ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார்.

கோத்தாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை – என்கிறது பொது பலசேனா

தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், இணைந்து கொள்ளுமாறு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பொது பலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா அதிபர் முக்கிய பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப்புடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ளதாக,  பாகிஸ்தான் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மோடியின் பாதுகாப்பு ஊடறுக்கப்படவில்லையாம் – இளவாலைச் சம்பவத்தை நிராகரிக்கிறது இந்தியா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அவரது பாதுகாப்பு ஊடறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.